விருதுநகர், செப்.4: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கிளைத்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஆந்திராவில் உத்தரவாத ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. சோம்நாத் கமிட்டி அறிக்கை அடிப்படையில் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டது. 2023 ஜூலை 22ல் நடைபெற்ற அமைச்சரவை கூட்ட முடிவின்படி புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.