தேனி, செப். 4: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தேனி கிளை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகராஜ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தாஜ்தீன், கருப்பழகு, ரவிக்குமார், முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.