சிவகங்கை, செப். 4: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லதா மற்றும் நிர்வாகிகள், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
previous post