பெரம்பலூர்,ஜூன்.7: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று அரசு ஊழியர்களுக்கான ஊதியக் கணக்கு துவங்குதல், காப்பீடு மற்றும் இதர சலுகைகள் வழங்கல் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுக்கான விளக்கக்கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் பி.எஸ்.தர் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட கருவூலத் துறையின் சார்பில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான மாநில அரசு ஊதிய தொகுப்புத் திட்டம் (SGSP) தொடர்பான விளக்கக் கூட்டம், மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தலுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கருவூல அலுவலர் பி.எஸ்.தர் தலைமையில் நேற்று (6ம்தேதி) நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி, அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட, 7-முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டதன் படியும், தமிழ்நாடு நிதிஅமைச்சரால் 2025-2026ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது வழங்கிய அறிவிப்புகளின் அடிப்படையிலும், மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஊதியக் கணக்கு துவங்குதல், காப்பீடு மற்றும் இதர சலுகைகள் வழங்கல் தொடர்பான அனைத்துதுறை அலுவலர்களுக்கு (SGSP) திட்டம் தொடர்பான இந்த விளக்ககூட்டம் மாவட்ட கருவூலஅலுவலர் தலைமையில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட SBI, IOB, IB, CB, AXIS, BOB & UBI ஆகிய 7- வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோர் இத்திட்டம் மற்றும் வங்கிகளால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் இத்திட்டம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அலுவலகத் தலைமை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் சுமார் 300க்கு மேற்பட்ட அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர்கள், வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.