கரூர், ஜூன் 23: அரசு ஆதிராவிடர் நல மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் அரசு ஆதிராவிடர் நல மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் புன்னம் அரசு ஆதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி கோட்டமேடு(ஆங்கிலம்), மாவத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி (அறிவியல்), நெய்தலூர் (ஆங்கிலம்), நந்தக்கோட்டை (ஆங்கிலம்,சமூக அறிவியல்), சணப்பிரட்டி(ஆங்கிலம் சமூக அறிவியல்), அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி திருக்காம்புலியூர்(சமூக அறிவியல்) பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்காணும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) காலிப்பணிடத்திற்கு M.Com., B.Ed., கல்விதகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடனும், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடத்திற்கு B.A.,B.Ed.மற்றும் B.Sc., B.Ed கல்விதகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடனும், எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ/ அஞ்சல் மூலமாகவோ 24.6.2025 முதல் 26.6.2025 முடிய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.114, கரூர் – 639007 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.