வேதாரண்யம், ஜூலை 4: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஸ்டெல்லா ஜேனட், தமிழக அரசின் அறிஞர் அண்ணா – தலைமைத்துவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2023-2024ம் கல்வியாண்டின் சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான இந்த விருதும், விருது தொகை ரூ.10 லட் சமும் ஜூலை 6ம் தேதி திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் விழாவில் வழங்கப்ப
டுகிறது. விருது பெற்ற தலைமை ஆசிரியரை, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.