திருச்செங்கோடு, நவ.16: ஆந்திரபிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், கொல்லமுடிப்பாடு நாட்கோ பள்ளி வளாகத்தில், 7 நாட்கள் சாரண, சாரணீயர்களுக்கான மண்டல அளவிலான அணித்தலைவர் பயிற்சி முகாம் திரளணி நடந்தது. இதில் திருச்செங்கோடு ஒன்றியம் வால்ராசாபாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சாரண மாணவர்கள் சஞ்சய், சித்தார்த் ஆகியோர் தமிழகம் சார்பில் கலந்துகொண்டனர். சிறப்பான பயிற்சி பெற்று திரும்பிய மாணவர்களுக்கான சான்றிதழ்களை, பள்ளியின் தலைமையாசிரியர் தங்கவேல் முன்னிலையில் திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர் பிரபுக்குமார் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி, விமலா, கவிதா, பிரபு, விஜய், நித்யா, கீதா, சிற்றரசு, நிவேதா ஆகியோர் கலந்துகொண்டனர்.