சென்னை: தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கொரோனாவால் இறப்பவர் சதவிகிதம் குறைந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ரூ.9 கோடியில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமையில் சிகிச்சை பெற்று குணமடைந்ததாக அறிவித்தார். …