உடுமலை, ஆக. 13: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், உடுமலை நகராட்சி 13வது வார்டு யுகேசி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திறந்துவைத்தார். உடுமலையில் நடந்த நிகழ்வில் நகர்மன்ற தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், நகர திமுக செயலாளர் வேலுச்சாமி, நகராட்சி ஆணையர் பாலமுருகன், பொறியாளர் சண்முகவடிவு, மண்டல செயற்பொறியாளர் பாலச்சந்திரன், துப்புரவு அலுவலர் நாட்ராயன், ஆய்வாளர்கள் செல்வம், சிவகுமார், உதவி பொறியாளர் ஷாலினி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.