வில்லிபுத்தூர், ஜூன் 24: வில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் டாக்டர் கலைஞரின் 102வது பிறந்த நாள் மற்றும் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. விருதுநகர் தெற்கு மாவட்ட வில்லிபுத்தூர் இளைஞரணி சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு இளைஞர் அணி அமைப்பாளரும், முன்னாள் எம்பியுமான தனுஷ் குமார் தலைமை வகித்தார். இதில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், நகர்மன்ற துணை தலைவர் செல்வமணி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.