திருச்சி, ஜூன் 2: திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள ரங்கம், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-26 ம் கல்வியாண்டில் டிப்ளமோ முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சேர நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் நோில் வந்து ₹.150ஐ செலுத்தி விண்ணப்பித்து உடனடியாக சோ்க்கை பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எஸ்சி,எஸ்டி மாணவா்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் (டிசிஇ-சிவில்), இயந்திரவியல், (டிஎம்இ-மெக்கானிக்கல்), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (டிஇஇஇ-எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்), மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் (டிஇசிஇ-எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன்), மற்றும் கணிப்பொறியியல் (டிசிஎஸ்இ-கம்ப்யூட்டா்) சைபா் அமைப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு பொறியியல் (டிசிஎஸ்ஐஎஸ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,242 கட்டணமாக செலுத்த வேண்டும். முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்போா் 10ம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு ஐடிஐ அல்லது 12ம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கை தொடா்பாக 9443673710,8072002452,9442431190,9042418693,9787330393, 90036 66061, 9597476719, 8248252577 என்ற எண்களிலும்,நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் 9842004853, 9626885482, 96776 42215, 7373905151, 9842316326, 7604933100 எண்களிலும் தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பம்சம்களாவன: பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள், மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், ஸ்மார்ட்கிளாஸ் ரூம், மாணவ மாணவியருக்கு விடுதி வசதி, இலவச பேருந்து பயண அட்டை, ரயில் கட்டண சலுகை, முதலாமாண்டு மாணவா்களுக்கு இலவச பாடப்புத்தகம், 6 முதல் 10 அல்லது 12 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை, தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு வேலை வாய்ப்பை உயா்த்திட திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசின் உதவித்தொகையுடன் தொழிற்சாலைகளில் பயிற்சி, தொழிற்முனைவோர் மேம்பாட்டிற்காக ஈடி பிரிவின் மூலம் சிறப்பு பயிற்சி, மதிப்பெண் அடிப்படையில் மாணவியா்களுக்கு உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாற்றுத்திறனாளி மாணவ மாணவியா்களுக்கு ‘உதவித்தொகை வருடம் ரூ.50,000, பெற்றோரை இழந்த மாணவ மாணவியா்களுக்கு உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாணவ மாணவியா்களுக்கு செஸ் கிளப், கலாச்சார கிளப் போன்ற பல்திறன் மேம்படுத்தும் பயிற்சிகள், 2024-2025ல் மூன்றாம் ஆண்டு முடித்த அனைத்து மாணவா்களும், வளாக நோ்காணல் மூலம் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.