அறந்தாங்கி, ஆக. 23: அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சி மடத்து குடியிருப்பு பகுதி பொதுமக்கள் குடிதண்ணீர் பற்றாகுறையை போக்க வேண்டும் என அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்து இருந்தனர்.
கோரிக்கையை ஏற்று அமைச்சர் நேற்று அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் 1லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஆர்டிஒ சிவக்குமார், வட்டாச்சியர் திருநாவுகரசு உள்ளிட்ட உள்ளாச்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.