பொன்னமராவதி, செப்.1: பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பொன்னமராவதி வட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் விஜயா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் செல்லையா, மாவட்ட துணைச்செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பையா, மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் யாசர், பாண்டியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொன்னமராவதி வட்ட பொருளாளராக இளவரசி, வட்ட பிரதிநிதியாக அம்பாள் கற்பகம், பிர்க்கா தலைவர்களாக பாண்டிசெல்வம், கமலம், வடிவேலு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.