அரக்கோணம், ஜூன் 27: அரக்கோணம் அருகே கோயிலில் அம்மன் தாலி மற்றும் பூஜை சாமான்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ஏரிக்கரை அருகே நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் பூஜை சாமான்களை மர்ம நபர்கள் நேற்று திருடிச்சென்றனர்.இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், அரக்கோணம் சோமசுந்தரம் நகரை சேர்ந்த சிவக்குமார்(47), குமார்(40) ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோயிலில் நகை மற்றும் பூஜை சாமான்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நகை ஒரு சவரன் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.