திருக்கோவிலூர், ஜூன் 16: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மலை மீது அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அதுல்ய நாதஸ்வரர் சிவன் கோயில். இக்கோயிலில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வைகாசி மாசம் உற்சவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் பக்தர்களிடமிருந்து 89 ஆயிரத்து 845 ரூபாய் பணம் காணிக்கையாக வரப்பெற்றது. இந்த பணியின்போது மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மாலதி, ஆய்வாளர் பாலமுருகன், செயல் அலுவலர் அறிவழகன், அறங்காவலர் குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.