திருச்சி, ஜூலை 7:திருச்சி காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் ஐயப்பனுக்கு நடந்த தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல மற்றும் மகர விள க்கு காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காலம்காலமாக கடைபிடித்து வரும் ஐதீகங் களை கடைபிடித்து, முறையான மண்டல விரதமிருந்து சபரிமலை ஐயப்பனின் அருளைப்பெற வேண்டும், ஐயப்பனின் மகத்துவத்தை உணர்ந்திட வேண்டும் என்பதனை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக தமிழ்நாடு ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஐயப்பன் உற்சவம் திருச்சியில்நேற்று தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
திருச்சியில் ஐயப்பன் உற்சவம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காவிரி அய்யாளம்மன் படித்துறையில் ஐயப்ப சுவாமிக்கு தீர்த்தவாரி மற்றும் மகா அபிஷேகம் நேற்று நடைபெற்றது. அப்போது, பால், தயிர், பன்னீர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடைபெற்ற அபிஷேகத்தை திரளான அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.