சாயல்குடி,ஆக 26: கடலாடி அருகே மங்களம் பூரணதேவி,புஷ்கலா தேவி உடனுரை அய்யனார், விநாயகர், கருப்பணசாமி மற்றும் சேமக்குதிரைகள் மற்றும் பரிவார கிராம தேவதைகளுக்கு குடமுழுக்கு நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் துவங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.
முதல்காலம் முதல் நான்கு கால பூஜைகள் வரை நடத்தப்பட்டு யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு நேற்று முன்தினம் காலையில் மஹா பூர்ணஹீதி நடத்தப்பட்டு கோயில் கலசங்களில் கும்ப புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதணைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.