நிலக்கோட்டை, ஜூலை 31: கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வயது நிரம்பிய ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு டிடிபி (DTP) தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆர்தர் முன்னிலை வகித்தார். இம்முகாமில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் இரணஜன்னி ஆகிய நோய்களுக்கான டிடிபி எனப்படும் தடுப்பூசி சமுதாய நல மருத்துவமனை செவிலியர்கள் மூலம் மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது. போடப்பட்டது. மழைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றுகளால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படாமல் காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்தனர்.
அம்மையநாயக்கனூர் பள்ளியில் டிடிபி தடுப்பூசி முகாம்
52
previous post