தஞ்சாவூர், ஆக. 19: அம்மாபேட்டை அருகே பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிலை தடுமாறி காரைக்காலில் இருந்து கரூர் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.காரைக்கால் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மனைவி ஆனந்தி. லாரி உரிமையாளர் ஆவார். அவருக்கு சொந்தமான லாரி நேற்றுமுன்தினம் இரவு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து பேப்பர் ஆலைக்கு மூல பொருள் ஏற்றி சென்றது. லாரியை டிரைவர் நீதி ராஜன் ஓட்டிச்சென்றார். அப்போது அம்மாபேட்டை அருகே பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு லாரி கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பள்ளம் உள்ளது. இந்த நிலையில் லாரி நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் அனைத்தும் கொட்டியது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்பட்ட இடத்தில் கீழே சிதறிய அனைத்து மூல பொருட்கள் ஜேசிபி வாகன மூலம் வேறு லாரிக்கு மாற்றப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் குமார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.