தஞ்சாவூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை நகர குழு கூட்டம் உமாபதி தலைமையில் அம்மாபேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர செயலாளர் ராஜாராமன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலு உள்ளிட்ட நகரகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அம்மாபேட்டையில் தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.