தொண்டி, ஆக.11: தொண்டி காமாட்சி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். தொண்டி காமாட்சி அம்மன் கோயில் 35ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 1ம் தேதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை தொண்டியம்மன் ஆலயத்தி விருந்து பால்குடம் எடுத்து மதியம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இரவு பூத்தட்டு ஊர்வலம்,அம்மன் ரத வீதி உலா மற்றும் பூச்சொரிதல் நடைபெற்றது.