மண்டபம்,ஆக.12: உச்சப்புளி அருகே நாகாச்சி கிராமத்தில் நாகாச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பழமையான கோயில் என்பதால் உச்சிப்புளி பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமை அதிகமாக வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.இதனால் இந்த கோயிலுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தபட்சம் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.
அதுபோல குழந்தை வரம் கேட்டும், பேய் பிடித்து அச்சம் அடைந்தவர்கள் உள்பட பலரும் கஷ்டங்களை போக்க இந்த கோயிலில், தங்கி தங்கள் குறைகள் தீரும் வரை அம்மனை வணங்கி செல்வதும் வழக்கமாக வைத்துள்ளனர். பக்தர்கள் தங்கும் வசதிகள் இல்லை. அதனால் ஊராட்சி மன்றம் சார்பில், பக்தர்கள் அடப்பனை வசதிகளுடன் ஓய்வு கூடாரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.