தர்மபுரி, ஆக.12: ஆடி மாத கடைசி ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி செந்தில் நகர் புற்றுநாகர் கோயில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று, புற்றில் பால் ஊற்றி வணங்கினர். இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில், நேற்று காலை பல்வேறு திரவியங்களால், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாரியம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள், அம்மனை வழிபட்டனர். இதேபோல், வெளிப்பேட்டைதெரு அங்காளம்மன் கோயில், எஸ்வி ரோடு அங்காளம்மன் கோயில், கோட்டை கல்யாணகாமாட்சி அம்மன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில், ஆடி மாத துவக்கத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.