சாயல்குடி, செப்.4: மங்களம் பாலதேவதை அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் உள்ள விநாயகர், பாலதேவதை வில்வஜோதி அம்மன், கிருஷ்ணாம்பிகை, கருப்பணசாமி மற்றும் பரிவார, கிராம தேவதைகளுக்கு 3ம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை நேற்று முன்தினம் பூஜைகள் தொடங்கியது. நேற்று காலையில் வேத மந்திரங்களுடன் சாமி விக்கிரகங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. நிகழ்ச்சியில் முத்துராமலிங்கம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
previous post