திண்டுக்கல். ஆக.6: திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் காளகஸ்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர் உடனுறை அபிராமி அம்மனுக்கு, தனித்தனியே சன்னதி அமையப்பெற்றது. கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேற்று, இக்கோயிலில் உள்ள 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. இதில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணமும், தங்கம் 145 கிராம், வெள்ளி 280 கிராம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இப்பணியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் சுரேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முகவேல், வீரக்குமார், நிர்மலா, மலைச்சாமி, செயல் அலுவலர் தங்கலதா, கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
அம்மன் கோயிலில் ரூ.11.70 லட்சம் உண்டியல் காணிக்கை
previous post