அம்பை, ஆக. 17:அம்பை அருகேயுள்ள சிவந்திபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (65). இவர் சொந்தமாக சுப்பிரமணியபுரம் பொத்தை அருகே டிம்பர் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் சென்ட்ரிங் வேலைக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பிகளை கடைக்கு வெளியே அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 13ம்தேதி இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 14ம் தேதியன்று கடைக்கு வந்து பார்த்த போது சுமார் 10 கிலோ எடையுள்ள சென்ட்ரிங் கம்பிகள் காணவில்லை. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் அப்பகுதிகளிலுள்ள சிசிடிவியிலுள்ள பதிவுகளை ஆய்வு நடத்தினர். அதன் அடிப்படையில் எஸ்ஐ அக்னல்விஜய் மற்றும் போலீசார் இரும்பு கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அம்பை அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் 10 கிலோ கம்பிகளை திருடியவர் கைது
previous post