நெல்லை, அக். 20: அம்பை அருகே வீடுபுகுந்து நகை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பை அருகேயுள்ள வாகைகுளத்தைச் சேர்ந்த நம்பிராஜனின் மனைவி இளங்காபதி (40). இவர் கடந்த 17ம்தேதி வீட்டை பூட்டி விட்டு அருகேயுள்ள கிராமத்திற்கு வேலைக்கு சென்றார். மாலை அவர் வீடு திரும்பிய போது கள்ளச்சாவி போட்டு வீட்டுக்கதவை திறந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த 3 பவுன் நகையை திருடியபடி வெளியறி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை இளங்காபதி விரட்டிச் சென்றபோதும் பிடிபடாமல் தப்பியோடி விட்டார். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1.20 லட்சம் ஆகும். பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த அம்பை போலீசார், நகையை திருடிச்சென்றவரை தேடி வருகின்றனர்.