நெல்லை, ஜன. 24: அம்பை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் பாபநாசம் கோயிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தனர். பின்னர் அவர்கள் கோயில் அருகேயுள்ள கல் மண்டபத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோவிலான்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி துரைக்குட்டி (50) கல் மண்டபத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த குடும்பத்திலுள்ள 4 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பதற்காக அருகிலுள்ள கடைக்கு நைசாக பேசி அழைத்து சென்றார். இதனையடுத்து மறைவான இடத்தில் வைத்து துரைக்குட்டி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி அழுது கொண்டே நடந்த விவரங்களை பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அம்பை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் துரைக்குட்டியை கைது செய்தனர்.
அம்பை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தொழிலாளி கைது
72
previous post