அம்பை, மார்ச் 14: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டு உள்ளதாக நெல்லை குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்துவந்த போலீசார், மேல அம்பாசமுத்திரம், ரகுமான் தெருவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55) என்பவர் 40 கிலோ எடை கொண்ட 48 மூட்டைகளில் 1,920 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான செல்வராஜை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.