அம்பை,ஆக.19: அம்பை கோவில்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா (75). இவருக்கு சொந்தமான அறுவடை இயந்திரத்தை கடந்த ஆக.8ம் தேதி அதே பகுதியில் நிறுத்தியுள்ளார். பின்னர் ஆக.14ம் தேதி அங்கு சென்று பார்த்த போது அறுவடை இயந்திரத்தில் இரும்பு ரோலர் மற்றும் ஜாக்கி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதேபோன்று கோவில்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது அறுவடை இயந்திரத்தில் பேட்டரியை காணவில்லை. இதுகுறித்து சுப்பையா, சுப்பிரமணியன் ஆகிய இருவரும் அம்பை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அக்னல்விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பிரம்மதேசம் வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் (33) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.