எஸ்டோனியா: பெலாரஸ் நாட்டின் மனித உரிமைக்கான வழக்கறிஞரும், 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அலெஸ் மற்றும் அவர் நிறுவிய வியாஸ்னா மனித உரிமை மையத்தை நிறுவிய மூன்று முக்கிய நபர்கள் பொது ஒழுங்கை மீறும் நடவடிக்கைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாலியன்ட்சின் ஸ்டீபனோவிச்சுக்கு 9 ஆண்டுகளும், உலாட்சிமிர் லப்கோவிஸ்க்கு 7 ஆண்டு மற்றும் டிஸ்மிட்ரி சலாவ்யூவுக்கு 8 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….