திருப்பூர், அக்.27: திருப்பூர் தலைமை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் மெகா மேளா இன்று (27ம் தேதி) நடக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை பி.எஸ்.என்.எல் வணிகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்நாட்டிலேயே தயாரான தொழில்நுட்பத்தைக் கொண்டு பி.எஸ்.என்.எல் விரைவில் 4ஜி அறிமுகம் செய்ய உள்ள நிலையில், 27-ம் தேதி (இன்று) திருப்பூர் தலைமை தொலைபேசி நிலையத்தில் மெகா மேளா நடக்கிறது.
இதில் சிறப்பு தள்ளுபடி மற்றும் ஆபர் வழங்கப்பட உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பில்களுக்கு ஒரு முறை கட்டண தீர்வு, அதிவேக பைபர்நெட் புக்கிங், லேண்ட்லைன் டூ பைபர்நெட் மாற்றம், இலவச 4ஜி சிம் அப்கிரடேஷன், புதிய சிம்கார்டு, எம்.என்.பி., மற்றும் இதர கார்பரேட் சேவைகளும், இந்த மேளாவில் வழங்கப்படும். அனைவரும் அசல் ஆதார் அட்டையுடன், இந்த மேளாவில் பங்கு பெற்று பயன் அடையலாம். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.