பாடாலூர், ஆக. 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி. ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும் உள்ளார். இவர், நேற்று சென்னை சென்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் தங்க குடியிருப்பு மற்றும் கூடலூர் கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் உறுதியளித்தார்.