வத்திராயிருப்பு, ஆக.9: விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் சுரைக்காய்ப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அன்னக்கொடி, இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் ராசசேகர், மரகதவேல், ஒன்றிய பொருளாளர் மதிவாணன், சுந்தரபாண்டியம் பேரூர் செயலாளர் காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, ஊர்த் தலைவர் ராசேந்திரன், ஒன்றியப் பிரதிநிதிகள் முத்தையா, சுந்தர்ராஜ், கிளைச் செயலாளர்கள் அக்கனாபுரம் முத்துராமலிங்கம், கொண்டையம்பட்டி பால்ராஜ், ஆயர்தர்மம் வனராசு செல்வம், மக்கள் நலப்பணியாளர் பால் வண்ணன், இளைஞரணி முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.