புதுக்கோட்டை, செப்.3: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்காக புதுக்கோட்டையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகின்றன. இப்பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நாளை (4ம் தேதி) மாலை தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டையில் நடக்கிறது. இதில் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத்து இதற்காக திறந்தவெளி மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்பணிகளை வடக்கு மாவட்டச் செயலாளரும், மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்டச் செயலாளரும், மீனவளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். குறிப்பாக நேற்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்த நிலையிலும் பொதுக்கூட்டத்திற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் இருவரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ஜெயக்குமார் ரூபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் செல்வின், செந்தூர்மணி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தெற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு, வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலக்குழு தலைவர் பாலகுருசாமி, தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெயக்கொடி, மேற்கு ஒன்றியச் செயலாளர் புதூர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், தொண்டர் அணி துணை அமைப்பாளர் சைமன், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், வக்கீல் அணி மகேந்திரன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சண்முக நாராயணன், தொழிலாளர் அணி மொபட் ராஜன், தகவல்தொழில்நுட்ப அணி மாரிச்செல்வம், ஓட்டுநரணி துணை அமைப்பாளர் பாலா, கிளை செயலாளர்கள் செல்வின், சேரந்தையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.