ஓசூர், செப்.28: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், ஓசூரில் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேலத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு, ₹10.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதனை உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமன், துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணன், பிரபாகரன்(எ) ராஜா, தனுகுமார் நாகப்பன், முனீர் பாஷா, சீதாராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.