திருச்சி, செப்.3: திருச்சியில் 17 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி உறையூர் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 1ம் தேதி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஹோட்டல் அருகே வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டூவீலரை மடக்கி சோதனை செய்தனர். டூவீலரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வயலூர் ேராடு சீனிவாச நகரை சேர்ந்த காமராஜ்(42) என்பவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.