புதுச்சேரி, ஆக. 24: அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (39) என்பவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். இதையடுத்து தம்பதி அமெரிக்காவிலேயே வசித்து வந்தனர்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இந்நிலையில் சவுமியா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக, பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி சவுமியாவை, பாலசுப்பிரமணியம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து ெகாண்டதாக பாலசுப்பிரமணியன் மற்றும் சவுமியா குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்காவில் இறந்த பாலசுப்பிரமணியன் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 3 குழந்தைகளும் அங்கே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கிடையில் பாலசுப்பிரமணியன் மற்றும் சவுமியா கடைசியாக ேபசி ஆடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது. அதில், பாலசுப்பிரமணியம், சவுமியாவிடம் எப்போது அந்த வாலிபரை பிடிக்க ஆரம்பித்தது என்று கேட்டுள்ளார். அப்போது சவுமியா அழுது கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு எனவும், ஓட்டலில் கள்ளக்காதலணுடன் புகைப்படம் எடுத்துகொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் பிரச்னை நடைபெறும் போது கள்ளக்காதலன் தனக்கு ஆறுதல் கூறாமல் சென்றதாகும், தொடர்ந்து தங்களுக்கு நான் நல்ல ேதாழியாக இருப்பதாகவும், மேலும் குழந்தைகளிடம் நடந்ததை கூறிவிட்டு, தனித்தனியாக வாழலாம் என்று சவுமியா கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியன் இன்னொருரை விரும்பிய மனைவி தனக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். தொடர்ந்து இவருக்கும் இது சம்பந்தமாக பிரச்னை ஏற்படவே, கொடூர சம்பவம் நடந்துள்ளது.