மதுரை: மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி. நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை அனுசியா வரவேற்றார். விழாவில் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து கலாம் பற்றிய பேச்சு, ஓவியம், கவிதை, பொன் மொழிகள், வினாடி வினா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியைகள் அருவகம், மனோன்மணி சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுகுமாறன் மற்றும் தன்னார்வலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.