புதுக்கோட்டை, மே 26: அபெகா (அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ்) பண்பாட்டு இயக்கம் சார்பில் ‘அறிவோம் மார்க்ஸை’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது.
கடந்த 24, 25ம் தேதிகளில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.சரீப் தொடங்கி வைத்தார். ‘இன்றைய இந்திய வாழ்பில் மார்க்சியம்’ என்ற தலைப்பில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘பேராசான் தந்த மூலதனம்’ என்ற தலைப்பில் மொழி பெயர்ப்பாளர் தியாகு, ‘மார்க்ஸ் – இளமை, கல்வி மற்றும் தன்னுருவாக்கம்’ என்ற தலைப்பில் அபெகா நிறுவனர் மருத்துவர் நா.ஜெயராமன் ஆகியோர் பேசினார்.