இலுப்பூர், ஜுன் 2: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர் அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கு புதுக்கோட்டை சாலையில் உள்ளது. இந்த குப்பை கிடங்கில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகளாக பிரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில், நேற்று மதியம் மறு சுழற்ச்சிக்காக சேகரித்து வைக்கபட்டிருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. முதலில் சிறிய அளவில் பற்றிய தீ மள, மளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் கரும்புகை ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.