போச்சம்பள்ளி, நவ.2: போச்சம்பள்ளி நகர அனைத்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். கவுரவ தலைவராக தேவராஜன், தலைவராக அம்மன்ராஜா, செயலாளராக தம்பிதுரை, பொருளாளராக மணியம் சிவகுமார், துணை தலைவர்களாக சென்னப்பன், மகேந்திரன், சம்பத், பழனிசாமி, ஜெகதீஸ், துணை செயலாளர்களாக மணி, பிரபாகரன், குமார், ரமேஷ், தலைமை ஆலோசகர்களாக வசந்திமுருகேசன், பரசுராமன், முருகேசன், மாதேஷ், சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் பாஸ்கர், சம்பத், விஜயன், சுரேஷ், ஆறுமுகம், தணிகைவேலன், துரை, விக்னேஷ், நாகராஜ், ஜெயவேல், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.