சேலம், ஜூன் 11: ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கு, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் திட்டத்தில் யோகா என்பது ஆரம்ப சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. சர்வதேச யோகா தினம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் சார்பில், வரும் ஜூன் 21ம் தேதி யோகா நிகழ்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வௌிட்டுள்ளது. அதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி நிறுவனங்களும், யோகா சங்கம் நிகழ்வை கடைபிடிக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சி தொடர்பான அறிக்கை மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலாளர் ராகவ்லங்கர் மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 21ம் தேதி யோகா நடத்த உத்தரவு
0
previous post