வாழப்பாடி, ஆக.29: அனைத்து துறையிலும் நேர்மையாக நடப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என, சேலத்தில் நடந்த திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம், வாழப்பாடியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம்.செல்கணபதி எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: அனைத்து துறையிலும் நேர்மையாக நடைபெறுவது தான், திராவிட மாடல் ஆட்சி. அனைவரும் சமம் என்ற முறையில் முதலமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார். அனைத்து தரப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் ஆட்சியின் லட்சியம்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில், சேலம் மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக வெற்றி பெறும். ஒன்றிய அரசு எந்த ஒரு உதவியும் செய்யாத நிலையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும், முதலமைச்சர் துணையோடு நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
தமிழ்நாட்டை புறக்கணிக்கும் வகையில், நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன், மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம், அவைத்தலைவர் கருணாநிதி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர்.தருண், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மனோகரன், சங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், மலர்விழி ராஜா, முத்துலிங்கம், கோபால், சோமசுந்தரம், சந்திரமோகன், பாலசுப்பிரமணியம், வேல்முருகன், சக்கரவர்த்தி, மூர்த்தி, தங்கமருதமுத்து, சிவராமன், மாணிக்கம், மாதேஸ்வரன், அழகுவேல், டாக்டர்.செழியன், விஜயகுமார், சீனிவாசன், திருநாவுக்கரசு, சேகர், ரமேஷ், தனசேகரன், செல்வம், சுப்பிரமணியன், பாபு (எ) வெங்கடேஸ்வரன், வெங்கடேசன், பழனிசாமி, கலைச்செல்வன், ரேவதி மாதேஸ்வரன், பன்னீர்செல்வம், விஜயகுமார், வெங்கடேசன், ஜெயராமன், அப்பாதுரை, வீரேந்திரதுரை, ஜெயவேல், வேணுகோபால், கோவிந்தன் மாணிக்கம், ரவி, பழனி, பெரியசாமி, சேட்டு, வேல்முருகன், கவிதா சக்கரவர்த்தி, ஜெயசெல்வி பாலாஜி, ராஜா, ஜெயலட்சுமி ரஜினி, பூங்கொடி சிவராமன், ஆறுமுகம், அசலாம்பு பூபதி, மாதேஸ்வரி மாது, கலா கனகராஜ், அறிவழகன், துணை தலைவர் பழனிசாமி, சாந்தகுமாரி சரவணன், குமார், ரஞ்சித்குமார், மாதேஸ்வரி மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.