தஞ்சாவூர், ஜூன் 19: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 14, 26 மற்றும் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் அந்த பகுதிகளில் புதிய மின் மற்றிகளை நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மேயர் சன்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய கழக செயலாளர் செல்வகுமார், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் நீலகண்டன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.