திருப்புத்தூர், செப். 1: திருப்புத்தூர் அருகே ஆவிணிப்பட்டி- கீழச்சிவல்பட்டி சாலையில் நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர். இந்த மாட்டு வண்டி பந்தயத்தை அரசு அனுமதியின்றி நடத்தியதாக ஆவிணிப்பட்டியைச் சேர்ந்த அழகுசுந்தரம், சுப்பையா, ஆறுமுகம், வெள்ளைச்சாமி, தேனப்பன் ஆகிய 5 பேர் மீது கீழச்சிவல்பட்டி எஸ்ஐ சேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.