திருச்சி, ஜூன் 23: திருச்சியில் உரிய அனுமதியின்றி காவிரி கரையில் மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி ரங்கம் திருவளர்ச்சோலை பகுதியில் ரங்கம் போலீசார், கடந்த ஜூன் 21ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவளர்ச்சோலை பகுதியில் காவிரி கரையில் ஒரு செங்கல் சூளை அருகே ஒருவர் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி மணல் அள்ளியதாக, அவர் மீது வழக்கு பதிந்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு தள்ளுவண்டி மற்றும் முக்கால் யூனிட் மணல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி மணல் அள்ளியவருக்கு சிறை
0
previous post