தேன்கனிக்கோட்டை, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் பஜார் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கடையில் பட்டாசு விற்பனை நடந்து கொண்டிருந்தது. அந்த கடையில் போலீசார் சென்று விசாரித்தபோது, அனுமதி பெறாமல் பட்டாசுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரசாத்ராவ் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.