ஏழாயிரம்பண்ண, மே 20: விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை சுப்பிரமணியாபுரம், விஜயகரிசல்குளம், உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சல்வார்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு அலுவலகத்தில் சல்வார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு அரசு அனுமதி இல்லாமல் ரூ.5000 மதிப்புள்ள திரி பொருத்தப்பட்ட வெடி குழாய்கள் இருந்தது தெரியவந்தது.அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை செய்ததில் சிவகாசி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சத்யா அளித்த புகாரின் பேரில் பிரவீன்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.