கிருஷ்ணகிரி, மார்ச் 4: பர்கூர் ஜெகதேவி கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி எருதாட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஜெகதேவி கிராம நிர்வாக அலுவலர் தீபா, பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய ஜெகதேவி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கோபி, அமில்தாஸ், கமல்தாஸ், எம்ஜிஆர் நகர் காந்த் மற்றும் அன்பு ஆகிய 5பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், எட்டிக்கல் அக்ரம் கிராமத்திலும் அனுமதியின்றி எருதாட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து விஏஓ ஹரிதாஸ் கொடுத்த புகாரின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயவேல், குமார், சக்திவேல், சிலம்பரசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அனுமதியின்றி எருதாட்ட விழா
0